ஆஸ்திரேலியாவை வெல்ல விராட் கோஹ்லியின் ‘மாஸ்டர் பிளான்’ – அடிலெய்டில் எடுபடுமா??

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் 3 வேக மற்றும் 1 ஸ்பின் பௌலருடன் களத்தில் இறங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா vs இந்தியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள்,3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கி உள்ளது. முதல் போட்டி மட்டும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் பகலிரவு ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதுவரை கோஹ்லி டாஸ் வென்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்:

கடந்த தினங்களாக ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். டேவிட் வார்னர் மற்றும் வில் புகோவிஸ்கியும் விலகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணிக்காக துவக்க பேட்ஸ்மேன்களாக யார் விளையாட போகிறார்கள் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ரஹானே கேப்டன்ஷி – விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!!

இந்நிலையில் அதிரடியாக மேத்யூ வேடை ஆஸ்திரேலிய அணி துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளது . மேத்யூ வேட் இதுவரை மிடில் ஆர்டரில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிளான்:

இந்தியா அணியின் முதல் போட்டிக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்தினமே அறிவித்து இருந்தது. அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர். கூடுதலாக விஹாரி மற்றும் ப்ரித்வி ஷா பந்து வீச வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்திய அணி தங்களது வேக பந்துகள் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here