அந்தரத்தில் பறந்த விராட் கோஹ்லி – திருப்பு முனையாக அமைந்த கேட்ச்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பிடித்த அபாரமான கேட்சால் திருப்புனை ஏற்பட்டு ஆஸ்திரேலிய அணி 191 ரன்களில் சுருண்டது.

ஆஸ்திரேலியா vs இந்தியா :

ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3டி 20 மற்றும் 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது. இதில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.முதல் போட்டி மட்டும் பகலிரவு போட்டியாக நடைபெறும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.ஆனால் இந்தியா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 73, புஜாரா 43 மற்றும் ரஹானே 42 ரன்கள் எடுத்துள்ளனர். இறுதியில் இந்தியா அணி 244 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 ,பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை எடுத்தனர்.

அதன்பின் ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்ஸை துவக்கினார்கள் . அந்த அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. பும்ராஹ்வின் அசத்தலான பந்து  வீச்சில் ஆஸ்திரேலிய அணி முதல்  17 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன் பின் களம் வந்த ஸ்மித் மற்றும் லபுரஷேன் பொறுமையாக விளையாடி ரன்கள் எடுத்து வந்தனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பில்டிங்கில் சொதப்பி சில கேட்ச்களை  தவறவிட்டனர்.  அதன் பின் 41  வது ஓவரை  வீச வந்த அஸ்வின் அபாரமாக பந்து வீசி கேமரூன் க்ரீன் விக்கெட்டை வீழ்த்தினார்.

‘மெண்டல் டார்ச்சர் அனுபவித்தேன்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு!!

இவர் பந்தை லெக் சைடு திசையில் அடிக்க முயன்றார். ஆனால் பந்து  ஸ்லிப் திசையில் சென்றது. இதனை கேப்டன் விராட் கோஹ்லி காற்றில் பாய்ந்து அருமையாக கேட்சினை  பிடித்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் அஸ்வின் அருமையாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்களில் சுருண்டது. விராட் கோஹ்லியின் கேட்சை இந்தியா ரசிகர்கள் பாராட்டி கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here