மாவீரன் நெப்போலியன் புற்றுநோயால் தான் இறந்தார் – 200 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த மர்மம்!!

0

பிரான்ஸின் முன்னாள் அரசரும் ராணுவ வீரருமான மாவீரன் நெப்போலியன் மறைவு புற்றுநோயால் ஏற்பட்டது என்று 200 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் நெப்போலியன்:

தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15 தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாத சிறுவனாக வளர்ந்தார் நெப்போலியன். ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை வென்று தனது ஆட்சியை நிறுவியவர் மாவீரன் நெப்போலியன்.

1815-ஆம் ஆண்டு நடைபெற்ற வாட்டர்லூ போரில் (Battle of Waterloo) நெப்போலியன் படை தோல்வியுற்றது. மாவீரன் நெப்போலியன் நாடு கடத்தப்பட்டு பிரிட்டனுக்கு சொந்தமான ஹெலினா தீவில் (Island of Helena) அடைத்து வைக்கப்பட்டார். ஆறு வருடங்களுக்கு பிறகு நெப்போலியன் எனும் மாவீரனின் வீர சகாப்தம் மறைந்து விட்டதாக செய்தி வந்தது. ஆனால் அவரது இறப்பு குறித்த மர்மம் இன்னும் விளக்கப்படம் இருந்தது தற்போது 200 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது இறப்பு குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்கா அருகே உள்ள செயிண்ட் ஹெலனா தீவில் அடைத்துவைக்கப்பட்ட அவர், புற்றுநோயால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தனிமைச் சிறையில் இருந்த நெப்போலியனுக்கு என்ன நடந்தது? அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு மக்கள் மனதில் இருந்தது. தற்போது அவரது இறப்பு பற்றி செய்தி வெளியகியுள்ளது.  1821 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் ஒன்று செயிண்ட் ஹெலனா தீவில் இருந்து சென்னையின் அன்றைய ஆளுநர் சர் தாமஸ் மன்றோவுக்கு அனுப்பப்பட்டிருப்பது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தெரியவந்துள்ளது. அதில், மாவீரன் நெப்போலியன் மே 5 ஆம் தேதி உயிரிழந்தாகவும், அவரது உடல் அதற்கு மறுநாளே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவர் குடல் புற்றுநோயால் இறந்தது தெரியவந்துள்ளது. அவர் இறந்து சுமார் 200 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது அவரது இறப்பு குறித்த மர்மம் விளங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here