Friday, April 26, 2024

சர்வதேச விமான சேவைகள் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கும் – விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி..!!

Must Read

விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது உரையில், கொரோனா நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் ஆகஸ்ட் 15 முதல் படிப்படியாக தொடங்கும்  என தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான சேவை தொடங்க அழுத்தம்:

 சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் இடையில் தொடங்கப்படலாம் என விமானப் போக்குவரத்துக்கு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது  நம் நாட்டிற்கு  சொந்தமான ஏர் இந்தியா மட்டுமே சர்வதேச போக்குவரத்திற்கு ஒரே வாய்ப்பாக உள்ளது.

Veovo helps airports with social distancing - Passenger Terminal Today

தனியார் விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம், சர்வதேச விமான போக்குவரத்துக்கு குறித்து தொடர்ந்து கோரிக்கை மற்றும் அழுத்தம் கொடுப்பதினால் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனால் ஆகஸ்ட் 15 முதல் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாடு விமான சேவைகள் அதிகரிக்கலாம்:

உள்நாட்டு விமான சேவைகள் 50-60% – ஐ அடையும் போதும், மற்ற நாடுகள் சர்வதேச விமான சேவையை தொடங்கும் போதும், சர்வதேச விமான சேவைகள் தொடங்கும் என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஜூன் 20  அன்று தெரிவித்துள்ளார். வரும் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு இணையாக, உள்நாட்டு விமான சேவைகளும் தற்போதுள்ள 50%-ல் இருந்து 60-70% ஆக அமைச்சகம் அதிகரிக்கப்படலாம் என யூகிக்கப்படுகிறது.

plane services
plane services

விமான போக்குவரத்தின் பொது இயக்குனரகம் முழுத் தொற்று நிலை மாறியவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் விமான சேவைகளை தொடங்கும் என அறிவித்து உள்ளது.

பல நாடுகளுடனான இருதரப்பு ஒப்புதல் பேச்சு

இந்திய விமான நிலைய அதிகாரத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, ‘இருதரப்பு ஒப்புதல் (Bilateral Bubbles)’ எனப்படும் இரு வழி விமானங்கள் அல்லது US, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் இணைப்பை தொடரும்  பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.

India to resume international flights to US, France - hardip singh
India to resume international flights to US, France – hardip singh

இப்பொழுது வெற்றிகரமாக, UAE உடன் இருதரப்பு ஒப்புதல் உள்ளது. சர்வதேச விமான சேவையை தொடர பல நாடுகளுடன் பேச்சு வார்த்தையில் உள்ளதாக ஜூன் 23 அன்று ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -