Saturday, April 10, 2021

கிரிக்கெட் நடுவரால் கிராமத்துக்கு கிடைத்த செல்போன் நெட்ஒர்க் – ஹீரோவாக கொண்டாடும் மக்கள்..!

Must Read

பிசிசிஐ நடுவர் அனில் சவுத்ரி செல்போன் பேசுவதற்காக சுமார் அரை கிலோமீட்டர் சென்று மரத்தில் ஏறி பேசிய சம்பவம் அறிந்து ஒரு நிறுவனம் நெட்வொர்க் அமைத்துள்ளது.

கிரிக்கெட் நடுவரால் செல்போன் நெட்ஒர்க்..!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 23ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கிரிக்கெட் போட்டி நடுவர் அனில் சவுத்ரி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பூர்விக கிராமமான டாங்க்ரோல் சென்றிருந்தார். டெல்லியில் உள்ள குடும்பத்தினரிடம் பேசுவதற்கு செல்போனை எடுத்தபோதுதான் அந்த கிராமத்தில் செல்போன் நெட்வொர்க் கிடைக்காது என்பது அவருக்கு தெரியவந்தது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா உறுதி – மகன், மருமகனுக்கும் தொற்று!!

மேலும் நெட்வொர்க் கிடைக்க சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விவசாய நிலத்திற்குள் சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது செல்போனில் டவர் கிடைத்தது. அதன்பின் தனது குடும்பத்தினரிடம் பேசினார்.

இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து ஒரு நெட்வொர்க் நிறுவனம் அந்த கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் விவசாய நிலத்திற்குச் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து செல்போனில் பேச முடிகிறது. தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் எளிதாக பாடம் கற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் கிராம மக்கள் அனில் சவுத்ரியை ஹீரோவா பார்க்கிறார்கள்.

தற்போது அங்குள்ள மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் நான் வெறும் நடுவர் மட்டுமே என்று தெரிவித்துவிட்டேன் என்று அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -