டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை – மத்திய உயர்கல்வித்துறை தகவல்!!

0
Schools reopen
Schools reopen

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து உள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் ஆகஸ்ட் 31 வரை 7வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் பூட்டப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

college students
college students

இந்தியாவின் முதல் கழுதை பண்ணை தொடக்கம் – ஒரு லிட்டர் 7000 ரூபாய்!!

நாடு முழுவதும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதற்கான ஆலோசனையில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் யுஜிசி வழிகாட்டுதல்கள் படி, இந்த ஆண்டு இறுதிக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here