வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – ஓட்டுநர் உரிமத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்! மத்திய அரசு அறிவிப்பு!!

0
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை..

நாட்டில் போக்குவரத்து சேவை அதிகரித்து வரும் நிலையில், ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்படும் ஓட்டுனர் உரிமத்தில், மாற்றங்களை கொண்டு வருவதற்கான அதிரடி முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

மத்திய அரசு அதிரடி:

நாடு முழுவதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் வாகன போக்குவரத்து என்பது தொடர்ந்து பன்மடங்காக பெருகிக்கொண்டே செல்கிறது. இதனால், இந்த போக்குவரத்து சேவைக்காக மத்திய அரசு சாலை பணிகளை அகலப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

வாகனத்தை இயக்க, 18 வயது நிரம்பிய ஒருவருக்கு அரசனது ஓட்டுநர் உரிமம் வழங்குகிறது. இதே போல் கனரக வாகனங்கள் பயன்படுத்துவதற்கு தனி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இதை மாற்றி, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக சர்வதேச அளவில் ஓட்டுனர் உரிமம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

driver

இது மட்டுமல்லாமல், இந்திய அளவிலான ஓட்டுனர் உரிமத்துடன், சர்வதேச ஓட்டு உரிமத்தை இணைக்க க்யூ ஆர் கோடு வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசின், இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here