இசையில் மட்டும் இல்ல., இதுலயும் நீங்க தான் கிங்! இளையராஜா செயலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!

0
இளையராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி - சற்றும் எதிர்பாராமல் நெகிழ்ந்து போன இசைஞானி!!
இசையில் மட்டும் இல்ல., இதுலயும் நீங்க தான் கிங்! இளையராஜா செயலால் நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!

இசைஞானி இளையராஜா, இசை நிகழ்ச்சிக்காக  ஹங்கேரி சென்றுள்ள நிலையில் அங்கிருந்த படி தான் பார்த்த இடங்களை போட்டோ எடுத்து தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளையராஜா அசத்தல்:

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் இசை சாம்ராஜ்யமாக விளங்கி வருபவர் இசைஞானி இளையராஜா. தமிழ் மட்டுமல்லாது இதுவரை, பல மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படங்களில் இசையமைப்பது மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளில் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், ஹங்கேரி நாட்டில்  ஒரு பிரம்மாண்ட இசை கச்சேரியை நடத்த சென்றுள்ளார். அங்கிருந்த படி தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அறை  மற்றும் அங்கு இருக்கக்கூடிய சிறப்பம்சங்களை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் தனது ரூமில் இருந்து, வெளியே தெரியும் இயற்கை காட்சிகளையும் புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்து ரசிகர்கள், இசை மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று நினைத்தோம். உங்களுக்குள் இவ்வளவு திறமைகள் இருக்கா? என மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here