இத்தாலியை முந்திய கொரோனா பாதிப்பு – உலகளவில் 6வது இடத்தில் இந்தியா..!

0

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது அனைத்து நாடுகளிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உலக நாடுகளையே இந்த நோய் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிலவரப்படி கொரோனா தொற்றில் உலகளவில் 6 வது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா தொற்று

உலகம் முழுவதும் 68.5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.98 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 33.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

‘ஒளிரும் தமிழ்நாடு’ – தொழில் மாநாட்டை துவக்கி வைக்கிறார் முதல்வர்..!

மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தற்போது காலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட நிலவரப்படி 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 6642 உள்ளது. மேலும் 114073 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி, 6வது இடத்தில் இந்தியா உள்ளது. 1,965,708 நோய்த்தொற்று எண்ணிக்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதித்த நாடுகள்

அமெரிக்கா – 1,965,708, பிரேசில்- 646,006, ரஷியா- 449,834, ஸ்பெயின்- 288,058. பிரிட்டன்- 283,311,
இந்தியா- 236,657, இத்தாலி – 234,531, பெரு- 187,400, ஜெர்மனி – 185,414, துருக்கி – 168,340, ஈரான் – 167,156 பிரான்ஸ்- 153,055, சிலி – 122,499, மெக்சிகோ -110,026.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here