ஜனநாயக குறியீட்டு பட்டியலில் இந்தியா பின்னடைவு – 51வது இடத்திற்கு சரிந்தது

0
World Map

பொருளாதார புலனாய்வு என்ற அமைப்பு கடந்த 2019ம் ஆண்டிற்கான உலகளாவிய ஜனநாயக குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு பிரிட்டனை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு தேர்தல் செயல்முறை மற்றும் பன்மைத்துவம், அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாச்சாரம் மற்றும் சமூகத்தினரின் தனி உரிமைகள் ஆகிய ஐந்து சிறப்பம்சங்களின் அடிப்படையில் உலகின் 167 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் சென்ற ஆய்வில் 41வது இடத்தில் (7.10 புள்ளிகள்) இருந்த இந்தியா 10 இடம் பின் சென்று 51 இடத்திற்கு (6.90 புள்ளிகள்) சென்றுள்ளது. இதில் பாகிஸ்தான் 104-வது இடத்திலும், இலங்கை 69-வது இடத்திலும், வங்காளதேசம் 80-வது இடத்திலும் உள்ளன. சீனா 153-வது இடத்திலும், வடகொரியா கடைசி இடமான 167-வது இடத்திலும் (சர்வாதிகார ஆட்சிப் பிரிவு) உள்ளன.

ஜனநாயக குறியீட்டு நாடுகளின் தரவரிசை:

1) நார்வே
2) ஐஸ்லாந்து
3) ஸ்வீடன்
4) நியூசிலாந்து
5) பின்லாந்து
6) அயர்லாந்து
7) டென்மார்க்
8) கனடா
9) ஆஸ்திரேலியா
10) சுவிட்சர்லாந்து.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here