இந்தியாவில் ஒரே நாளில் 96,551 பேருக்கு கொரோனா உறுதி – 1,209 பேர் பலி!!

0

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவு 96,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் கொரோனாவின் வீரியம் இன்னும் குறைந்த பாடில்லை. மேலும் ஊரடங்கு உத்தரவில் வழங்கப்பட்ட அதிகப்படியான தளர்வுகளே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் 96,551 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,62,414 ஆக உயர்ந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

corona test
taking sample for corona test

உலகளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,209 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 76,271 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 70,880 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,42,66 ஆகும்.

கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் விகிதம் 1.67% ஆகவும், குணமடைபவர்கள் விகிதம் 77.65% ஆகவும் உள்ளது. தற்போது 9,43,480 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐசிஎம்ஆர் அறிக்கையின் படி, இதுவரை 5,29,34,433 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here