ஜடேஜா & குல்தீப்பின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்…, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

0
ஜடேஜா & குல்தீப்பின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்..., 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
ஜடேஜா & குல்தீப்பின் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்..., 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான கைல் மேயர்ஸ் (2) மற்றும் பிராண்டன் கிங் (17) சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பெவிலியன் திரும்பினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஒவேரிலேயே 114 ரன்களுக்குள் சுருண்டது. இதில், குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், இஷான் கிஷன் 52, சூர்யகுமார் யாதவ் 19, ஜடேஜா 16 மற்றும் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்தனர். 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி வீழ்த்தியதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த முதல் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவ் தட்டிச் சென்றுள்ளார்.

உண்மையை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடும் விஜயா.., திருமணம் நடக்குமா?? சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here