63 பந்தில் 126* ரன்கள் விளாசிய சுப்மன் கில்…, ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்து அபாரம்!!

0

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில், இந்தியாவின் சுப்மன் கில் சதம் விளாசியதன் மூலம், ரெய்னாவின் சாதனையை முறியடித்ததுடன் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

சுப்மன் கில்:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று டி20 போட்டியை விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்திருந்தது. இந்த கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 66 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டியில், இந்தியாவின் சுப்மன் கில், எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு, 63 பந்தில் 12 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 126 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். இதன் மூலம், சுப்மன் கில், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது, டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்ததுடன், அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

லீக் ஒன்னில் மெஸ்ஸியின் PSG அணி அபார வெற்றி…, புள்ளிப் பட்டியலில் உயர்ந்த இடத்தை எட்டி அசத்தல்!!

இதற்கு முன், விராட் கோலி (122), ரோஹித் சர்மா (118), சூர்யகுமார் யாதவ் (117) ரன்கள் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்மன் கில், டி20யில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச அளவிலான மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும், இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் ஆனார். இவர், சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும் விளாசி இருந்தார். டி20யில், ரெய்னா (23 வயது 156 நாட்களில்) அடித்த சாதனையை, சுப்மன் கில் (23 வயது 146 நாட்களில்) அடித்து சாதனை படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here