டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பந்த்…, பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??

0
டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பந்த்..., பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??
டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பந்த்..., பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??

நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியிலும் ரிஷப் பந்த் சொற்ப ரன்களில் வெளியேறியதால், டி20 போட்டிகளில் இவரது இடம் இந்திய அணியில் கேள்வி குறியாகி உள்ளது.

ரிஷப் பந்த்:

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2 வது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களாக ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கி இருந்தனர். இதில், ரிஷப் பந்த் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதற்கு காரணம், டி20 உலக கோப்பையில் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷராக தினேஷ் கார்த்திக் முதல் தேர்வாக இருந்தால், ரிஷப் பந்த் 2வது தேர்வாகவே இருந்தார். இதனால், ரிஷப்புக்கு கிடைக்கிற வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அதையும் சரியாக பயன்படுத்த தவறினார். இதன் விளைவால், பல வீரர்கள், தினேஷ் கார்த்திக் உட்பட, இவர் தொடக்க வீரராக களமிறங்குவது தான் சரியாக இருக்கும் என கூறி வந்தார்கள்.

ரிஷப் பந்த்-ஊர்வசி இடையேயான விவகாரம் …, உண்மையை உடைத்த சுப்மன் கில்!!

இந்நிலையில், இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்தை தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால், ரிஷப் பந்தோ 13 பந்துகளை எதிர் கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டியுள்ளார். இந்த சொதப்பல்களால் இவர், டி20 போட்டிக்கு சரிவர வரமாட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன. இவர், இனி வரும் காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டுமே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிசிசிஐயானது என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here