விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.., அப்போது புது ஹீரோயின் இவர் தானா??

0
என்ன நயன்-விக்கி அதுக்குள்ளே உங்க குழந்தைங்க இவளோ வளர்ந்துட்டாங்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!
என்ன நயன்-விக்கி அதுக்குள்ளே உங்க குழந்தைங்க இவளோ வளர்ந்துட்டாங்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!

முன்னணி நடிகரான அஜித் இப்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த உடன் அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்து பாடல்களையும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படம் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருக்கின்றனர். அதன்படி பார்த்தால் இந்த படத்திற்கு ஹீரோயினாக நயன்தாரா தான் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து நயன்தாரா வெளியேறி விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அஜித்துக்கு ஜோடியாக AK 62 படத்தில் முன்னணி நடிகையான த்ரிஷா நடிக்க போகிறார் என்ற தகவல் ஹோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அஜித்-திரிஷா காம்போவில் கிரீடம், மங்காத்தா என்னை அறிந்தால் போன்ற படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இதனால் இவர்கள் AK 62 வில் இணைந்து நடித்தால் படம் தரமாக இருக்கும் என ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here