நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன் இதுதான்…, அடித்து கூறிய அஸ்வின்!!

0
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன் இதுதான்..., அடித்து கூறிய அஸ்வின்!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன் இதுதான்..., அடித்து கூறிய அஸ்வின்!!

இந்திய அணி நாளை நியூசிலாந்துக்கு எதிராக 2வது டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்கான பிளேயிங் லெவன் குறித்து இந்தியாவின் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்:

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான, முதல் போட்டி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணியே தொடரை கைப்பற்ற இயலும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை அறிந்த, இரு அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இதற்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, கே எல் ராகுல், அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இளம் இந்திய அணி விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், நாளை நடைபெற இருக்கும் 2வது போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விவரித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது…, பாகிஸ்தான் கேப்டன் பளீச் பேட்டி!!

இவர் கூறியதில், சுப்மன் கிலுடன் ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் தொடக்கம் தருவார்கள். இதனை தொடர்ந்து, பேட்டிங் வரிசையில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர்களாக, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா களமிறங்குவார்கள் என்று கூறியுள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சுக்கு, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் சுழல் பந்து வீச்சுக்கு யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இவர் கூறிய பிளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார் இல்லாதது பிசிசிஐ இவரை அணியில் இருந்து விலக இருப்பதாக தெரிகிறது என தகவல்கள் பரவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here