ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது…, பாகிஸ்தான் கேப்டன் பளீச் பேட்டி!!

0
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது..., பாகிஸ்தான் கேப்டன் பளீச் பேட்டி!!
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது..., பாகிஸ்தான் கேப்டன் பளீச் பேட்டி!!

இந்திய அணிக்கு வருங்கால கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் வீரர் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி:

இந்திய அணி நடப்பு ஆண்டில் எந்த ஒரு பெரிய தொடரையும் வெல்லாததால் பிசிசிஐயானது ஒரு அதிரடியான முடிவை எடுத்திருந்தது. அதாவது, பல்வேறு தொடர்களுக்கு இந்திய அணியை தேர்வு செய்த சேத்தன் ஷர்மா தலைமையிலான குழுவை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியது. இதனை தொடர்ந்து, இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

டி20 உலக கோப்பை முடிந்த பிறகு, இனி ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணிக்கு வருங்கால கேப்டன் என்று பல தரப்பில் இருந்தும் ஆதரவுகள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து, பிசிசிஐயானது விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆவது போன்ற கனவு எல்லாம் யார் பார்க்கிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

மீண்டும் பார்முக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்…, 14,000 ரன்களை கடந்து அசத்தல்…, சச்சினை முந்துவாரா??

மேலும், ஐபிஎலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி தான் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 5 முறை பதக்கம் வென்றதற்கான அணியை ரோஹித் சர்மா வழி நடத்தி உள்ளார். இவர் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை மட்டும் இந்தியாவுக்கு வென்று தந்திருந்தால், இந்த பேச்சுக்கலாம் இடமே இருந்திருக்காது என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆசிய கண்டத்தை பொறுத்த வரை, ஒரு கோப்பையை வெல்ல தவறினால் உடனே கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சு வர ஆரம்பித்து விடும் என சல்மான் பட் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here