IND vs NZ 3rd T20: சூர்யகுமாருக்கு பதில் சஞ்சு சாம்சன்?? இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படும் மாற்றம்…, தினேஷ் கார்த்திக் கருத்து!!

0
IND vs NZ 3rd T20: சூர்யகுமாருக்கு பதில் சஞ்சு சாம்சன்?? இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படும் மாற்றம்..., தினேஷ் கார்த்திக் கருத்து!!
IND vs NZ 3rd T20: சூர்யகுமாருக்கு பதில் சஞ்சு சாம்சன்?? இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படும் மாற்றம்..., தினேஷ் கார்த்திக் கருத்து!!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சூர்ய குமாருக்கு பதில் சஞ்சு சாம்சனை களமிறங்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

IND vs NZ:

இந்திய அணி இன்று நியூசிலாந்துக்கு எதிராக கடைசி மற்றும் 3வது டி20 போட்டியை மெக்லீன் பார்க் மைதானத்தில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெற இருக்கும் போட்டியையும் வென்றால், தொடரை கைப்பற்றிவிடும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதே போல நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கும். இந்திய அணியை பொறுத்த வரையில், பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே கைகொடுத்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பரான, தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் நல்ல பார்மில் உள்ளார். எனவே இன்று நடைபெற இருக்கும் போட்டியில், இவருக்கு ஓய்வு அளித்து விட்டு சஞ்சு சாம்சனை விளையாடும் லெவனில் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் டூர்: ஜப்பானை வீழ்த்திய இந்திய வீரர்…, அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்!!

ஆனால், இந்த தொடரின் கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்றுதான் நினைப்பார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதனால், பார்மில் உள்ள சூர்யகுமாரை பிளேயிங் லெவனில் இருந்து எடுப்பது என்பது அரிதான ஒன்று. மாறாக, வேறு ஒரு வீரருக்கு பதில், சஞ்சு சாம்சனை விளையாடும் அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here