
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் டூரில் இந்திய வீரர் முகுந்த் சசிகுமார் ஜப்பான் வீரரை தனது அசத்தலான ஆட்டத்தால் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் டூர்:
ஜப்பானின் யோக்கைச்சியில் டென்னிஸ் தொடரின், ஒரு பகுதியான ஏடிபி சேலஞ்சர் டூர் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த டூரின் தகுதி சுற்றுகள் அனைத்தும் நடப்பு வருடத்தின் முதல் சில மாதங்களில் முடிவடைந்தன. இதன் தொடர்ச்சியாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், இந்தியாவின் முகுந்த் சசிகுமார் நேற்று ஜப்பானின் நவோகி நககாவாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில், இந்தியாவின் முகுந்த் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து தொடங்கிய 2வது செட்டில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு, முகுந்த் 7-6 என்ற கணக்கில் வென்றார்.
கோல் மழையில் நனையும் கத்தார்…, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அசத்தல் வெற்றி!!
தொடர்ந்து 2 செட்களை கைப்பற்றி இந்தியாவின் முகுந்த் ஜப்பான் வீரரை வீழ்த்தினார். இதன் மூலம், காலிறுதிக்கு செல்வதற்கான போட்டியில், நாளை தென் கொரிய வீரரான சுங் யுன்-சியோங்கை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த தொடரின் மற்றொரு போட்டியில், இந்தியாவின் ராமநாதன் ஐஸ்லாந்து வீரரான கொலின் சின்க்ளேரிடம் 2-6, 2-6 என வீழ்ந்தார்.