#INDvsENG டெஸ்ட் 4 வது நாள் ஆட்டம் முடிவு – ரோஹித் அவுட்! 381 ரன் இலக்கு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது இந்த போட்டியில் 4 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இந்தியா அணி விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 578 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். அதன் பின்பு களமிறங்கிய இந்தியா அணி 337 ரன்களுக்கு சுருண்டது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் செயல்பாடு பேசும் அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக பாண்ட் 91 மற்றும் சுந்தர் 85 ரன்களை அடித்துள்ளனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது. அதன்பின்பு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்திலையே அஸ்வின் சூழலில் பர்ன்ஸ் வீழ்ந்தார். அதன் பின்பு அஸ்வின் தனது சூழலினால் இங்கிலாந்து அணியினரை மிரட்டி வந்தார்.

420 ரன்கள் இலக்கு:

அஸ்வின் சூழலை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணியினர் தங்களது விக்கெட்டை இழந்து வந்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 178 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி இந்தியா அணிக்கு 420 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதன்பின்பு தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா அணி துவக்கியது. முதல் இன்னிங்ஸை போலவே இதிலும் ரோஹித் 12 ரன்னில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார்.

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இது தான் – துயரத்தில் ரசிகர்கள்!!

பின்பு 4 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா அணி 39 ரன்கள் எடுத்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளது. களத்தில் தற்போது கில் மற்றும் புஜாரா ஆட்டமிழக்காமல் உள்ளனர். போட்டி முடிய நாளைக்கு 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்தியா அணிக்கு இன்னும் 381 ரன்கள் தேவைப்படுகிறது. நாளைய போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டால் இந்தியா அணி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லைவ் ஸ்கோர்:

இந்தியாவிற்கு இலக்கு – 420

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 39\1

கில் – 15*
புஜாரா – 12*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here