டெல்லி விவசாயிகள் போராட்டம் – பிரபலங்களின் ட்வீட் குறித்து விசாரிக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவு!!

0

சச்சின் உட்பட இந்திய பிரபலங்கள் பலரும் விவசாயிகளின் போராட்ட கருத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பதிவிட்ட ட்விட்டர் கருத்து குறித்து விசாரிக்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

ட்வீட் குறித்து விசாரணை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து உலக தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவை சமூகவலைதளங்கள் மூலம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கான தங்களது ஆதரவை ட்விட்டர் பதிவாக பதிவிட்டிருந்தனர். ரிஹானாவின் இந்த கருத்துக்கு இந்திய பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ‘உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர் தலையிட தேவையில்லை’ என ட்வீட் செய்திருந்தார். இவரை தொடர்ந்து கிரிக்கெட்டர் ரெய்னா, விராட் கோஹ்லி, நடிகர் அக்சய் குமார், கங்கணா ரனாவத் டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோர் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இது தான் – துயரத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் பிரபலங்களின் ட்வீட் குறித்து மஹாராஷ்டிரா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் காந்தி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு பிரபலங்களுக்கு மனஅழுத்தம் கொடுத்து இத்தகைய பதிவுகளை பகிர்ந்துள்ளார்களா?? என்று விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த டிவீட்கள் அனைத்தும் ஒரு மணிநேரத்திற்குள்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்சய் குமார் மற்றும் சாய்னா நேவாலின் பதிவுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது எனவும், பல பதிவுகளில் ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே உள்ளது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here