விவசாயிகள் போராட்டத்தில் பிரியங்கா மௌனம் காப்பது ஏன்?? மியா கலிஃபா கேள்வி!!

0

டெல்லியில் பல நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டதிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பிரபல பாலிவுட் நடிகை மியா கலிஃபா, ப்ரியங்கா சோப்ரா இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபலங்களின் ஆதரவு:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களை ஊக்கப்படுத்தியும் போராட்டத்திற்கு ஆதரவளித்தும் பேசி வருகின்றனர்.

 

#INDvsENG சென்னை டெஸ்ட் – இஷாந்த் சர்மா புதிய சாதனை!!

முன்னதாக நடிகைகள் மியா கலிஃபா, சூசன், பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் க்ரெட்டா துன்பெர்க், அட்வகேட் மீனா ஹாரிஸ் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டீவீட் செய்திருந்தனர். பிரியங்கா சோப்ராவும் கூட கடந்த டிசம்பர் மாதத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் விவசாயிகள் இந்தியாவின் உணவு வீரர்கள் ஆவார்கள். அவர்களது அச்சங்கள் நீக்கப்ட்டு நம்பிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் அவர்களது பிரச்சனைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்” என பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு அவரிடமிருந்து எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய மியா கலிஃபா “பிரியங்கா ஏன் மெளனமாக இருக்கிறார்? அவர் எப்போது பேச போகிறார் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அவரின் இந்த மௌனமானது பெய்ரூட் அதிர்வுகளின் போது மௌனம் காத்த ஷாஹிராவின் மௌனத்தை போல இருக்கிறது. அவர் விரைவில் பேச வேண்டும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here