உலக கோப்பை போட்டி: தொடர் வெற்றியை நோக்கி இந்தியா.. மழையால் தடை படுமா.?

0
உலக கோப்பை போட்டி: தொடர் வெற்றியை நோக்கி இந்தியா.. மழையால் தடை படுமா.?
உலக கோப்பை போட்டி: தொடர் வெற்றியை நோக்கி இந்தியா.. மழையால் தடை படுமா.?

உலக கோப்பை தொடரில் பங்களாதேஷ் – இந்திய அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான பிட்ச் மற்றும் வானிலை நிலவரத்தை பற்றி இப்பதிவில் காணலாம்.

இந்திய அணி :

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 10 அணிகளுக்கு இடையை மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பொறுத்த வரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். இந்த நிலையில் தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச மைதானத்தில் நாளை இந்தியா, பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

கடந்த ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டதால், நாளைய போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பவுலர்களில் பும்ரா, கடந்த போட்டியில் எதிரணிக்கு பெறுமளவில் நெருக்கடி கொடுத்திருந்தார். இதனால், நாளை இவரது, வேகப்பந்து வீச்சு அணிக்கு கைக்கொடுக்க கூடும்.

உலக கிரிக்கெட்டின் முகமாக மாறிய விராட் கோலி…, வைரலாகும் ஒலிம்பிக் போஸ்டர்!!

ஆனால், இந்த போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருப்பதால், ரவீந்திர ஜடேஜா, குலதீப் யாதவ் இவர்களின் கை ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், வானிலை நிலவரம் கை கொடுக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதாவது, வானம் மேகமூட்டத்துடன் இருக்குமே தவிர 21 டிகிரி செல்சியஸுக்கு வெப்பம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் 60% ஈரப்பதத்துடன் மைதானம் இருக்கும். இதனால், மழைக்கு 12% வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here