இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றம்…, டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெறுவாரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றம்..., டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெறுவாரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றம்..., டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம் பெறுவாரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்திய அணி நாளை முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரானது, 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு சென்று, இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக 3 ஒருநாள் தொடரையும், 2 டெஸ்ட் தொடரையும் விளையாட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடர்களில், கடந்த செப்டம்பர் மாதம் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், அறுவை சிகிச்சை செய்த ஜடேஜா, இடம் பெற்றிருந்தார். ஆனால், இவரது முழு உடல் தகுதியை பொறுத்தே இந்திய அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில், ஜடேஜாவுக்கு பதில், ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

இவரை தொடர்ந்து, இந்த தொடரில் இடம் பெற்றிருந்த புதுமுக வீரர் யாஷ் தயாளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வீரர்களுக்கான மாற்றம் டெஸ்ட் தொடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், டெஸ்ட் தொடரில் ஜடேஜா களமிறங்குவார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பங்களாதேஷ் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (C), கே எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here