
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் ஐசிசியின் இந்த குறிப்பிட்ட விதியை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
IND vs AUS:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது, நடப்பு வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 50 ஓவர் உலக கோப்பை என இரு பெரிய அளவிலான தொடர்களை எதிர்நோக்கி உள்ளது. இதில், கடந்த 2021ம் ஆண்டு முதல் 9 அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடரின் இறுதிப் போட்டியானது வரும் ஜூன் 7ம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஐசிசியானது வீதிகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மைதானத்தில் வீரர் ஒருவர் அவுட் என்பதை 3வது நடுவர் (ஆன்-பீல்ட் அம்பயர்கள்) டிவி திரையில் ஒளிபரப்புவதற்கு முன்னரே, களநடுவர்கள் அவுட் கொடுக்கலாம்.
இதற்கு, ‘SOFT SIGNAL’ விதி என்று பெயர். இந்த விதியை தான் நீக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கூறி வருகின்றனர். இந்த ‘SOFT SIGNAL’ விதியை நீக்குவதற்கான பேச்சு வார்த்தை தற்போது எழுந்துள்ளது ஐசிசி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ஐசிசி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.