இனிமே தான் கோடை வெயிலின் ஆட்டமே இருக்கு.., தமிழ்நாட்டிற்கு அலார்ட் கொடுத்த வானிலை வல்லுநர்கள்!!

0
இனிமே தான் கோடை வெயிலின் ஆட்டமே இருக்கு.., தமிழ்நாட்டிற்கு அலார்ட் கொடுத்த வானிலை வல்லுநர்கள்!!
இனிமே தான் கோடை வெயிலின் ஆட்டமே இருக்கு.., தமிழ்நாட்டிற்கு அலார்ட் கொடுத்த வானிலை வல்லுநர்கள்!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோச்சா புயல் நேற்று வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான காற்று வீசியது. மேலும் அந்த புயல் தமிழ்நாட்டை பாதிக்காத நிலையில், தமிழகத்தை சுற்றி இருந்த மேகங்களை மட்டும் இழுத்து சென்றது. இதனால் தற்போது வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இயல்பான வெயிலை விட 2-3 செல்சியஸ் அதிகமாக காணப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கிறது. இது 41ஐ தொடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதன்படி அடுத்து வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது. அதுமட்டுமின்றி தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இந்நிலையில் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அதாவது, சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக 40 டிகிரி செல்சியஸ் இன்று பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி மதியம் 3.00 முதல் 3.30 மணி வரை நிலவும் கதிர்வீச்சு வெப்பம் மற்றும் வெப்ப சேர்க்கையால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். சொல்லப்போனால் இனிமே தான் கோடை காலமே ஆரம்பிக்க போகுது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here