ச்சீ.., உன் புருஷன் எதுக்கு அடுத்த பொண்ணை நோட்டம் விடுறான்.., ராதிகாவை கிழிக்கும் பாக்கியா!!

0
ச்சீ.., உன் புருஷன் எதுக்கு அடுத்த பொண்ணை நோட்டம் விடுறான்.., ராதிகாவை கிழிக்கும் பாக்கியா!!
ச்சீ.., உன் புருஷன் எதுக்கு அடுத்த பொண்ணை நோட்டம் விடுறான்.., ராதிகாவை கிழிக்கும் பாக்கியா!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது கோபி தேவையில்லாமல் பாக்கியாவை ஏதேதோ பேசி வாங்கி கட்டி கொண்டார். அதுமட்டுமின்றி இத்தனை நாள் அப்பா பேச்சை தட்டாமல் இருந்த செழியன் சட்டையை பிடித்து மிரட்டி விட்டார். இதனால் கோபி ஷாக்காகி விட்டார். இந்த பிரச்சனை இப்படி போய்க்கொண்டிருக்க ராதிகா மீண்டும் கலகத்தை ஏற்படுத்த பாக்கியாவை வம்புக்கு இழுக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது பாக்கியா சமைத்து கொண்டிருப்பதை பார்த்து பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வருகிறார். பாக்கியாவிடம் ரொம்ப ஷாக்ல இருக்கீங்க போலையே என்று சொல்கிறார். கோபி கேட்ட கேள்வியில என்ன பதில் சொல்றதுன்னே தெரியலையா?? உங்க முகத்துல அந்த ஷாக்கை பார்த்தேனே என்று சொல்கிறார். எழில் கோவப்பட்டு ராதிகாவை திட்ட ஆரம்பிக்கிறார். பாக்கியா அவரை பேச வேண்டும் என்று சொல்கிறார். மேலும் பாக்கியா ராதிகாவிற்கு தக்க பதிலடியும் கொடுக்கிறார்.

இனிமே தான் கோடை வெயிலின் ஆட்டமே இருக்கு.., தமிழ்நாட்டிற்கு அலார்ட் கொடுத்த வானிலை வல்லுநர்கள்!!

அதாவது, உங்க புருஷன் கோபி அப்படி கேட்டது எனக்கு ஷாக்கிங்காக தான் இருந்தது. ஆனால் அவருலாம் என்கிட்டே கேள்வி கேக்குறாருனு தான் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. உங்க புருஷன் இன்னொரு பொம்பளையை நோட்டம் விடுறாரு, அது அவருக்கு அசிங்கமா இல்லையா?? அதுக்கும் மேல நம்ம எப்படி இருக்கோமோ அப்படி தான் அடுத்தவங்களையும் யோசிப்போமாம். கோபி சாரும் அவரு மாதிரியே என்னையும் நெனச்சுட்டாரு போல என்று சொல்கிறார். இதனால் ராதிகா என்ன பேசுவது என்றே தெரியாமல் முழிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here