
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது தனது சொந்த மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த CSK அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, களமிறங்கிய KKR அணி 18.3 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் மூலம், CSK அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமானால், வரும் 20ம் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ருதுராஜ் 17, டெவோன் கான்வே 30, ரஹானே 16, அம்பதி ராயுடு 4, மொயின் அலி 1, ஜடேஜா 20 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ஆனால், CSKயின் சிவம் துபே அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 48* ரன்கள் எடுத்து அசத்தினார். இதில், இவர் 3 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அதிக (19) சிக்ஸர்களை எடுத்து, சஞ்சு சாம்சனுடன் முதலிடத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர், ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் மட்டும், CSK அணிக்காக 12 போட்டிகளில் 30 சிக்ஸர்கள் உட்பட 363 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து, RCBயின் மேக்ஸ்வெல் (16), டூ பிளஸி (12) என சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிக்ஸர்களை விளாசி உள்ளனர்.