IND vs AUS: விளையாடும் லெவனில் சூர்யகுமார்?? தென் ஆப்பிரிக்கா வீரர் கொடுத்த ஹிண்ட்!!

0
IND vs AUS: விளையாடும் லெவனில் சூர்யகுமார்?? தென் ஆப்பிரிக்கா வீரர் கொடுத்த ஹிண்ட்!!
IND vs AUS: விளையாடும் லெவனில் சூர்யகுமார்?? தென் ஆப்பிரிக்கா வீரர் கொடுத்த ஹிண்ட்!!

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி எந்த வித ஆட்டத்தை தேர்வு செய்ய உள்ளது என்பதை கருத்தில் கொண்டு சூர்யகுமாருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு தரலாம் என தென் ஆப்பிரிக்கா வீரர் கூறியுள்ளார்.

ஜேபி டுமினி:

பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான முதல் போட்டியில், நாளை இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த டிராபியில் இந்திய அணியில் ஏற்படுத்த கூடிய மாற்றம் குறித்து, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி சிலவற்றை கூறியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ஓர் அணியாக முதலில், எந்த விதமான கிரிக்கெட்டை விளையாட உள்ளோம் என்று தெளிவாக இருக்க வேண்டும். இதில், அடித்து விளையாட (தாக்குதல்) வேண்டும் என்று முடிவெடுத்தால், பிளேயிங் லெவனில் சூர்யகுமாருக்கு வாய்ப்பு தரலாம். இவர், அதிரடியான தாக்குதல் வீரர் ஆவார் என்றும் ஜேபி டுமினி கூறியுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் ரோஹித் சர்மா…, வைரலாகும் புகைப்படம்!!

மேலும், சுப்மன் கில் மூன்று வடிவ தொடர்களிலும் சிறந்த வீரராக வலம் வருவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லை என்றாலும், அதிக நெருக்கடி கொடுக்க கூடிய அணியாக திகழும் என்று ஜேபி டுமினி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here