#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – விளையாடுவாரா நடராஜன்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து துவங்குகிறது. இந்திய அணியில் 4 வது போட்டியில் காயம் காரணமாக பும்ராஹ் விலகிய நிலையில் அவருக்கு பதில் நடராஜன் அந்த போட்டியில் பங்கேற்பாரா?? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. மூன்றாவது போட்டி டிரா ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து துவங்குகிறது. தற்போது இந்தியா அணி வீரர்கள் பலர் காயத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காயம் காரணமாக 4 வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும் போட்டியின் நடுவே விஹாரிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் அவர் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்வதற்கு உதவினார். எனவே இவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார். மேலும் இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராஹ் தற்போது வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவரும் கடைசி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது இந்தியா அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

சென்னையில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா அபராதம் – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தற்போது கடைசி டெஸ்டில் விஹாரிக்கு பதில் ப்ரித்வி ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் ஜடேஜாவிற்கு பதில் குலதீப் யாதவ் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடர் தொடக்கத்தில் இருந்தே நடராஜன் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது பும்ராஹ்விற்கு பதில் நடராஜன் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடராஜனை களமிறக்க ரசிகர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது ட்விட்டர் பக்கத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்தியா அணியின் 11 வீரர்களின் பெயர் பட்டியலை அனைவரும் தங்கள் எண்ணத்திற்கேற்ப உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அதில் அனைவரும் நடராஜனின் பெயரை குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here