IND vs AUS 2nd ODI: இந்தியாவை 117 ரன்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா!!

0
IND vs AUS 2nd ODI: இந்தியாவை 117 ரன்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா!!
IND vs AUS 2nd ODI: இந்தியாவை 117 ரன்களுக்குள் சுருட்டிய ஆஸ்திரேலியா!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 117 ரன்களுக்குள் சுருண்டு உள்ளது.

IND vs AUS:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் தொடரின் 2வது போட்டியை விசாகப்பட்டினத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களில், சுப்மன் கில், 3வது பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானார். இவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா (13), சூர்யகுமார் யாதவ் (0) மற்றும் கே எல் ராகுல் (9) என அடுத்தடுத்து மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்திலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். மேலும், ஹர்திக் பாண்டியாவும் ஒரு ரன்னில் வெளியேற, விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

IPL 2023: பிரபல அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய புது கேப்டன்…, வெளியான நியூ அப்டேட்!!

ஆனால், விராட் கோலி (31), ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (0) மற்றும் முகமது சிராஜ் (0) என தொடர்ந்து ஏமாற்றமே தந்தனர். இதனால், இந்திய அணி 26 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும்.இழந்தது. அக்சார் பட்டேல் மட்டும் 29* ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பாக, மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், சீன் அபோட் 3 மற்றும் நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் குறைந்தப்பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here