பாலியல் வன்கொடுமை விவகாரம்: ராகுல் காந்தி வீட்டிற்கு படையெடுத்த டெல்லி காவல்துறை!!!

0
பாலியல் வன்கொடுமை விவகாரம்: ராகுல் காந்தி வீட்டிற்கு படையெடுத்த டெல்லி காவல்துறை!!!
பாலியல் வன்கொடுமை விவகாரம்: ராகுல் காந்தி வீட்டிற்கு படையெடுத்த டெல்லி காவல்துறை!!!

இந்தியாவில் ஒற்றுமையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டிருந்தார். இது கடந்த ஜனவரி 30ம் தேதியுடன் வெற்றிகரமாக முடிவுற்றது. இதன் பின்னர் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, “இந்தியாவில் ஊடகங்கள், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட துறைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. எனவே ஐரோப்பிய நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.” என கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது இந்திய பொதுமக்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற 2வது கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது “இந்தியாவில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்” என ராகுல் காந்தி கூறியது ஊடகங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. எனவே இதுகுறித்த தகவலை தெரிவிக்கும் படி டெல்லி போலீசார் கடந்த மார்ச் 16ம் தேதி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ஒன்றிய அரசு துறைகளில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறைகேடு., ஊழியர் சங்கம் கடும் கண்டனம்!!!

இதையடுத்து “பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை கூறும்படி யாரையும் வற்புறுத்த கூடாது” என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பான விவரங்களை கேட்டறிய டெல்லி போலீசார் இன்று ராகுல் காந்தியின் இல்லத்திற்கு படையெடுத்து இருந்தனர். இதில் “தனிநபர்களின் வாழ்க்கை, பாதுகாப்பு உள்ளிட்டவை முக்கியமான விவகாரம் என்பதால் ராகுல் காந்தியை நேரில் சந்திக்க வந்தோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.” என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here