ஐபிஎல் லீக்கின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது, தனது புதிய ஜெர்சியை, புது கேப்டன் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.
IPL 2023:
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர். சர்வதேச அணிக்காக விளையாடி வரும் வீரர்களும், விரைவில் அவர்களது ஐபிஎல் தொடருக்கான அணியில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த ஐபிஎல், தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரர்களான பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக விலகி உள்ளதால், இவர்களுக்கான மாற்று வீரர்களையும், அணி நிர்வாகம் அறிவித்த வண்ணம் இருக்கின்றன. இந்த வகையில் தான், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்-டுக்கு பதில் டேவிட் வார்னரே அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய ஜெர்சியை, கேப்டன் டேவிட் வார்னர், துணை கேப்டன் அக்சார் பட்டேல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் அறிமுகப்படுத்தி உள்ளனர். நீலம் மற்றும் ஆரஞ்சு நிறத்துடன் கூடிய இந்த ஜெர்சியானது, அணியின் முதன்மை ஸ்பென்ஸ்சரான JSW முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
𝕄𝕆𝕆𝔻 after looking at our #IPL2023 threads 👉 😁😍🥰💙❤#YehHaiNayiDilli ki Nayi Jersey 🥳 @davidwarner31 @akshar2026 @PrithviShaw pic.twitter.com/ofoLlwrJm0
— Delhi Capitals (@DelhiCapitals) March 19, 2023