பார்டர் கவாஸ்கர் டிராபியை மிஸ் செய்யும் முன்னணி வீரர்கள்…, காயத்தால் ஏற்பட்ட நிகழ்வு!!

0
பார்டர் கவாஸ்கர் டிராபியை மிஸ் செய்யும் முன்னணி வீரர்கள்..., காயத்தால் ஏற்பட்ட நிகழ்வு!!
பார்டர் கவாஸ்கர் டிராபியை மிஸ் செய்யும் முன்னணி வீரர்கள்..., காயத்தால் ஏற்பட்ட நிகழ்வு!!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியை மிஸ் செய்ய கூடிய முன்னணி வீரர்கள் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காணலாம்.

IND vs AUS:

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு பெற்றுள்ள, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி நாளை முதல் நாக்பூரில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் டிராபிக்கு இரு அணிகளிலும், சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும், முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தும் மட்டும் விலகி உள்ளனர். இந்தியாவை பொறுத்த வரையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர், முதுகு வலி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் இருந்து மட்டும் விலகுவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

3 மாதத்திற்கு பிறகு ரஞ்சி டிராபிக்கு திரும்பிய இந்திய வீரர்…, அரையிறுதிப் போட்டி இவருக்கு கைகொடுக்குமா??

இதே போல, ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்க கூடிய முன்னணி பந்து வீச்சாளர்களான, மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும், வெவ்வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இவர்கள், அனைவரும் விரைவில் அணிக்கு திரும்பும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபியானது விறுவிறுப்பாக அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here