IND vs AUS: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியில்…, பிளேயிங் லெவனில் இவங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா??

0
IND vs AUS: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியில்..., பிளேயிங் லெவனில் இவங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா??
IND vs AUS: ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியில்..., பிளேயிங் லெவனில் இவங்களுக்கு மட்டும் தான் வாய்ப்பா??

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியானது இன்று (செப்டம்பர் 22) மொஹாலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணியில் அஸ்வின் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இது ஒரு புறம் இருக்க ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் பலர் இந்த போட்டியில் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதற்கிடையே, உலக கோப்பையை எதிர் நோக்கி உள்ள இந்த அணிகளுக்கு இன்றைய போட்டி சிறந்த பயிற்சியாக இருக்க கூடும். மேலும், அணியின் வெற்றி என்பதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால், தரமான பிளேயிங் லெவனை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (சி), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (சி), சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here