தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1000…, திடீரென அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பள்ளிகளில் படித்து விட்டு உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் CRY என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தமிழக அரசின் தரவுகளை ஆய்வு செய்து புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் 100% மாணவர்களில் 50 சதவீதம் பேர் தான் 12ம் வகுப்புக்கு செல்கின்றனர்.
மீதமுள்ள 50 %பேர் 10ம் வகுப்பு முடித்தவுடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மேலும் இவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த காரணம் என்னவென்று பார்த்தால் குழந்தை திருமணம், குடும்ப சூழ்நிலை தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசு இனி வரும் நாட்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை குறைத்து அவர்கள் உயர்கல்விக்கு சென்று இந்த ஊக்க தொகையை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here