“ஒரே நாடு ஒரே தேர்தல்”: இத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10,000 கோடி? தேர்தல் கமிஷன் பகீர் அறிவிப்பு!!!

0

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி ஆகிய தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பதை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு பொதுமக்கள், சட்ட நிபுணர்கள் உட்பட பலரிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் “ஒரே நாடு ஒரே தேர்தல்”-ஐ அமல்படுத்துவது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் முக்கிய அறிவுரையை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் 15 ஆண்டுகள் வரை மட்டும் தான். எனவே “ஒரே நாடு ஒரே தேர்தல்” அமலுக்கு வந்தால், மூன்று முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும்.” என தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பல் சிகிச்சையால் கோமாக்கு சென்ற பெண்., மனநிலை பாதிக்கப்பட்ட மருத்துவரால் பரபரப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here