சோதனையில் சாதனை படைத்த இந்தியா..! உலகளவில் இரண்டாமிடம்!!!

0

இந்தியா வெறும் 130 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனைப் படைத்துள்ளது.  அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் முதல் நாடாக விளங்குகிறது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதிப்பு உலகளவில் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேசமயம் பாதிப்பு எண்ணிக்கை கையை மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.தடுப்பூசிகளே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதி விரைவாக மேற்கொண்டு வருகின்றன.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சத்தின் தகவலின் படி இந்தியா, 130 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது.மேலும் 60 வயதிற்கு மேற்பட்டோரில் 42 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. தடுப்பூசியை பற்றிய தவறான புரிதலால் மக்கள், ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறிது தயங்கினர். பின்னர் இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டினார். இதனால் தற்போது இந்தியா 130 நாட்களில் 20 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here