ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் & முகமது சிராஜ்-க்கு இடம்!!

0
ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் & முகமது சிராஜ்-க்கு இடம்!!
ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் & முகமது சிராஜ்-க்கு இடம்!!

ஐசிசியானது சர்வதேச வீரர்களில் இருந்து, ஒருநாள் வடிவத்திருக்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து உள்ளது.

ஐசிசி ODI:

ஐசிசியானது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில், 11 பேர் கொண்ட சிறந்த ஒருநாள் அணியை வெளியிட்டுள்ளது. இந்த அணியில், பிசிசிஐயால் 2022ஆம் ஆண்டின், ஒருநாள் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களையே ஐசிசி ஒருநாள் அணியில் இணைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, கடந்த ஆண்டு 17 போட்டிகளில் 724 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயரும், 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ்-ம் ஐசிசியின் சிறந்த ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு, ஐசிசி தரவரிசையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் டாப் 5ல் இருக்கும் பாகிஸ்தானின் பாபர் அசாம் கேப்டனாக உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி!!

ஐசிசியின் ODI அணி விவரம்

பாபர் அசாம் (சி) (பாகிஸ்தான்), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்), ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா), டாம் லாதம் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), மெஹிதி ஹசன் மிராஸ் (பங்களாதேஷ்), அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here