ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி!!

0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி!!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:

மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய வீரர்கள், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஏமாற்றிய போதும், கலப்பு இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ஜோடி, நேற்று நடைபெற்ற 2வது சுற்றில், உருகுவே மற்றும் ஜப்பான் ஜோடியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், இந்திய ஜோடி தொடர்ந்து 2 செட்களையும் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் மற்றும் லாட்வியாவின் ஜெசினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொள்ள இருந்தன.

விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பிறகு இந்திய அணியில் யார் இருப்பார்?? ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

ஆனால், காலிறுதி சுற்றில் ஸ்பெயின்-லாட்வியா ஜோடி வாக் ஓவர் பெற்றதால், இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு நேரடியாக முன்னேறி உள்ளனர். இதனை, போபண்ணா அதிகாரப்பூர்வமாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அரையிறுதி போட்டிகள் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here