கார் வாங்குவதற்கு இதுவே சரியான நேரம் – வாடிக்கையாளர்களுக்கு பம்பர் ஆஃபரை வழங்கிய ஹுண்டாய்!!

0

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் தற்போது பயனாளர்கள் பயனடையும் வகையில் பல சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகை வருகிற மே மாதம் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய்:

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா நோய்ப்பரால் காரணமாக அனைத்து வகையான தொழில் துறைகளும் முடங்கின. மேலும் சில பகுதிகளில் தற்போது ஊரடங்கு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கார், பைக் போன்றவற்றை வாங்குவதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளது. தற்போது இதனை ஊக்குவிக்க ஹுண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோடைகாலத்தில் உங்க சருமத்தை பாதுகாக்கணுமா?? அப்போ இதை படிங்க!!

அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் ஹுண்டாய் நிறுவனம் தன் ஹுண்டாய் சான்ட்ரா, ஆரா, கிராண்ட் ஐ 10 போன்ற மாடல்களுக்கு தற்போது சலுகைகளை வழங்கியுள்ளது. சலுகைகள் மூலம் ஹுண்டாய் நிறுவன மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த சலுகைகள் விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் வழங்கபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்:

  • ஹுண்டாய் சான்ட்ரா மடலுக்கு 20 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும்.
  • கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும்.
  • ஹூண்டாய் ஆரா மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும்.
  • ஹூண்டாய் ஐ20 மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படும்.
  • கோனா இவி மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here