30 நிமிடத்தில் சூப்பரான “வறுத்த நெய் பன்னீர் பிரியாணி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0
SONY DSC

பிரியாணி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பண்டிகை என்றாலே வீட்டில் பிரியாணி சமைப்பது வழக்கம். சிலர் பிரியாணி செய்வது மிகவும் சிரமம் என நினைத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், வீட்டிலையே சுலபமாக அரை மணிநேரத்தில் சுவையான பிரியாணி செய்ய முடியும். அதிலும் அதிக செலவு இல்லாமல் பன்னீர் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கி

பாசுமதி அரிசி – ஒரு கப்

பெ. வெங்காயம் – 3

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 4

இஞ்சி, பூண்டு – 4

புதினா, கொத்தமல்லி

மஞ்சள்தூள் – சிறிதளவு

மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

பட்டை, இலை, கிராம்பு – 2

சோம்பு – 1 டீ ஸ்பூன்

ஏலக்காய் – 1

முந்திரி பருப்பு – 5

தயிர் – 2 ஸ்பூன்

நெய், எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

பன்னீரை துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து நெய்யில் பொறித்து எடுத்துக் கொள்ளவும். தனியாக மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, தயிர், மிளகாய், சோம்பு சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். பாசுமதி அரிசியை ஊறவைக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, இலை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை தாளித்து நீளநீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மாசாலா, மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பின் ஊறவைத்த அரிசி, உப்பு, நெய் சேர்த்து அடி பிடிக்காமல் 2 நிமிடம் கிளறிவிட்டு ஒரு கப் அரிசிக்கு 1-1/2 தண்ணீர் ஊற்றி, வறுத்த பன்னீரையும் சேர்த்து குக்கரை மூட வேண்டும். ஒரு விசில் அல்லது இரண்டு விசில் வந்தவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறினால் மிக சுவையாக இருக்கும். சூப்பரான பன்னீர் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here