‘என்னடா தோசை இது’ – பாலா, புகழை அடித்து நொறுக்கும் வெங்கடேஷ் பட்!! கலக்கலாக வெளியான ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் தற்போது கலக்கலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. வாரா வாரம் மக்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டுள்ளனர் என்றே சொல்லலாம். தற்போது விஜய் டிவி அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது.

குக் வித் கோமாளி

ஆரம்பித்த நாட்களில் இருந்து அமோகமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி தற்போது டாப் ரேட்டிங்கில் போய்க்கொண்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளியை தான் மக்கள் அனைவரும் பார்த்து வருகின்றனர். சனி, ஞாயிறு எப்பொழுது வரும் என்று காத்திருப்பவர்களே அதிகம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஷிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை சொல்லவே வேண்டாம் வேற லெவெலில் காமெடியில் கலக்கி வருகின்றனர். ஆனால் புதிதாக களமிறங்கியவர்கள் டம்மி தான் என்று சொல்ல வேண்டும். பார்வதி கொடுத்த காசுக்கு மேலே நடிக்கிறார். சுனிதாவை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்.

மேலும் சரத் நமக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். ஷகிலா இதில் கலந்து கொண்டது டிஆர்பியை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த வாரமும் நிகழ்ச்சி கலைக்கட்டியுள்ளது.

இந்த வாரத்தில் கோன் தோசை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வழக்கம் போல டாஸ்குகளை புகழ், ஷிவாங்கி சொதப்ப பல கலாட்டாக்கள் நடந்துள்ளது. இந்த வாரத்திலும் அஸ்வின் ஜெயிப்பார் என்று பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வாரத்தில் கத்தி போன்ற உபகரணங்களை பயன்படுத்த கூடாது என்றும் ரூல்ஸ் போட்டுள்ளார். இதனால் ஷிவாங்கி தத்தளித்து வருகிறார். மேலும் ஷிவாங்கி தூங்க வேறு செய்கிறார். இவ்வாறு முற்றிலும் பல கலாட்டாக்கள் இந்த வாரத்தில் நமக்காக காத்துக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் மலாய் குருமா ஒருவர் செய்ய வெங்கடேஷ் பட் மலாய் என்றால் என்ன என்று கேட்டதற்கு பலரும் கேலியாகவே பதில் கூறியுள்ளனர். இந்த ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here