பத்தே நிமிடத்தில் மொறுமொறு “மசாலா வெங்காய வடை” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

மழைக்காலம் என்றாலே நமக்கு காரசாரமாக சூடாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். டீ, காபி குடித்துக் கொண்டே மழையை ரசித்து ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் பலர். அவர்களுக்காக பத்தே நிமிடத்தில் சுவையான, மொறுமொறுப்பான வெங்காய வடை எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 4

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

அரிசி மாவு – ஒரு கப்

சின்ன சீரகம் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி இலை – தேவைக்கேற்ப

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் ஒல்லி ஓல்லியாக நறுக்கி கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி தோலை உரித்து சீவி கொள்ளவேண்டும். கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கவும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒரு பௌலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலைகள், சின்ன சீரகம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். வெங்காயத்தில் உள்ள தண்ணீர் தனியாக பிரிந்து வரும். அப்பொழுது அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வடை பதத்திற்கு பிசைய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி காய வைக்க வேண்டும். கையில் எண்ணையை தடவிகொண்டு தேவையான அளவு மாவை எடுத்து தட்டி காய்ந்த எண்ணையில் போட வேண்டும். பொண்ணிறமாக இரு பக்கமும் வந்தவுடன் எடுக்க வேண்டும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். டீ, காபியோடு சேர்த்தது சாப்பிடும்போது மிக சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here