இனிமேல் வீட்டுலயே ஈஸியா செய்யலாம் – Veg Roll.!

0

தேவையான பொருட்கள்

கேரட், காலிஃளார், உருளைக்கிழங்கு, கோதுமை மாவு 300கி, சோளமாவு 100கி,  பச்சரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கார்ன். கரம் மசாலா, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய்.

செய்முறை

முதலில் கோதுமை மாவை பிசைந்து வைத்து கொள்ளவும். பின்பு உருளைக்கிழங்கு, காலிஃளார், கேரட் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம்) போன்றவற்றை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்  ஊற்றி  அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

கொத்தமல்லி சாப்பிட்டா முகம் பளபளன்னு வருமா?? இத்தனை நாலு இது தெரியாம போச்சே.!

பின்பு வேக வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காரம் வேண்டுமானால் மிளகாய் போடி சேர்த்து கொள்ளலாம். நன்கு வதக்கியதும்  கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும். கார்னை( corn) அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு சோளமாவை தண்ணீரில் கலந்து கொள்ளவும். பச்சரிசி மாவை கெட்டியாக கலந்து கொள்ளவும்.

இப்பொழுது பிசைந்து வைத்த மாவை  சப்பாத்தி  போல் தேய்த்து அதில் காய்கறி கலவையை உள்ளே வைத்து உருட்டி கொள்ளவும். பின்பு மேல் புறத்தில் பச்சரிசி கலவையை ஒட்டி கொள்ளவும். பின்பு அதனை சோளமாவு கலவையில் முக்கி எடுத்து அரைத்து வாய்த்த கார்னில்  புரட்டி எடுத்து எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்பொழுது Veg roll தயார்.Corn பதிலாக Bread crumbs பயன்படுத்தி கொள்ளலாம்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here