மாலை நேர ஸ்னாக்ஸ் ரெசிபி ‘சிக்கன் கட்லெட்’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
chicken cutlet

சிக்கனில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. சிக்கனை நாம் சமைக்கும் முறை பொறுத்தே அதன் நன்மை, தீமை அமைந்துள்ளது. சிக்கனில் அதிகம் புரத சத்துக்கள் உள்ளதால் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கண்புரை பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. இப்பொழுது இந்த சிக்கனை வைத்து சிக்கன் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

chicken
chicken

சிக்கன் – 1/2 கி

பச்சைமிளகாய் – 3

வெங்காயம் – 1

மிளகாய் தூள்

மஞ்சள்தூள்

முட்டை

கரம் மசாலா

எண்ணெய்

செய்முறை

முதலில் எலும்பில்லாத சிக்கனை தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றை சேர்த்து  பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

chicken cutlet

பிறகு அதில் சிறிது சோளமாவை சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது அதனை தட்டையாக தட்டி அதனை பிரட் துகளில் பிரட்டி அதன் பிறகு முட்டை கலவையில் முக்கி மறுபடியும் பிரட் துகளில் பிரட்டி 10 நிமிடம் கழித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான சிக்கன் கட்லெட் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here