இனிமேல் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன்..!

0

தேவையான பொருட்கள்

Spicy Chettinad Pepper Chicken Recipe (Step by Step) - Whiskaffair

சிக்கன் – முக்கால் கிலோ, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, தயிர் – ஒரு மேசைக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மிளகாய் வற்றல் – 4(வறுத்து அரைக்க) + 4 (தாளிக்க), மிளகு – 1/2 தேக்கரண்டி(தாளிக்க) + 1 1/2 தேக்கரண்டி (வறுத்து அரைக்க), முழு மல்லி – 3 தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 10 பல் (சிறியது தாளிக்க), கறிவேப்பிலை – 3 இணுக்கு

செய்முறை

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும். வாணலியில் 1 /12 தேக்கரண்டி மிளகு, சீரகம், 4 மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.

வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போடவும். சிக்கனை ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். சிக்கன் நன்கு வெந்ததும் வறுத்து அரைத்த பொடியை போட்டு பிரட்டி விட்டு சிம்மில் வைக்கவும்.

Chettinad Pepper Chicken Recipe in Tamil | பெப்பர் ...

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும் மற்றொரு சிறிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத் தேக்கரண்டி மிளகு, பூண்டு, 4 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை சிக்கனுடன் சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி விடவும். இது சிக்கனுக்கு ருசியையும், மணத்தையும், பார்ப்பதற்கு அழகையும் தரும்.

சுவையான, மணம் நிறைந்த செட்டிநாடு பெப்பர் சிக்கன் தயார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. ஆசியா உமர் அவர்கள் விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ளார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் செய்த செட்டிநாடு பெப்பர் சிக்கன். பிரியாணி, புலாவ் வகைகள், கட்டு சாதம், சாம்பார், தயிர் சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here