ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க ‘அவல் மிக்ஸ்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
avalmix

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீண்ட நேரம் பசிக்காமல் நம் பசியை தாங்கும் திறன் படைத்தது அவல். தேங்காய் பாலில் உள்ள சத்துக்கள் நம் வயிற்று புண் மற்றும் அல்சர் போன்ற நோயினை போக்க கூடியது. மேலும் உடலையும், கூந்தலையும் நன்றாக பராமரிக்க கூடியது. ஒருமுறை சாப்பிட்டாலே சிறுவர் முதல் பெரியவர் வரை மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.

தேவையான பொருட்கள்:

ராகி அல்லது வெள்ளை அவல் – ஒரு கப்

தேங்காய் பால் மற்றும் தேங்காய் துருவல் – தேவையான அளவு

பணகற்கண்டு அல்லது நாட்டுச்சக்கரை – தேவையான அளவு

பேரிச்சைப்பழம் – 4

பாதாம் – 5

மாதுளை விதைகள் – 1/4 கப்

செய்முறை:

முதலில் அவலை நன்றாக அலசி விட்டு தேங்காய் பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஊறிய பின் பேரிட்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட வேண்டும்.

அதன் பின் ஊற வைத்து தோள் நீக்கிய பாதாம், பணகற்கண்டு, தேங்காய் துருவல் மற்றும் மாதுளை விதைகளை சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். இதில் அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here