கொரோனாவில் இருந்து தப்பிக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி..? மத்திய அரசின் ஆயுஷ் வழங்கிய டிப்ஸ்..!

0

கோவிட்- 19 தொற்று பரவாமல் இருக்க உடலுக்கு எதிர்ப்புசக்தி தேவைப்படுகிறது.’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்த்தும் உன்னதப் பொன்மொழி இது. ஏனென்றால், சகல வசதிகளும் செல்வங்களும் நிறைவாக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது இராது. 

ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய தருணம் இது. எதிர்ப்பு சக்திகள் உடலில் இருந்தால் சளி, இருமல், காய்ச்சல் வராமல் இருக்கும். கடுமையான காய்ச்சல் காலங்களிலும் கூட எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பானங்களை குடித்தால் அவற்றிலிருந்து மீண்டுவர முடியும். 75% உணவின் மூலமாகத்தான் உடலுக்கு வேண்டிய சத்துகள் பெறமுடியும்,கொரோனா பரவி வரும் நிலையில், மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 239 பேர்  கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு 18 நாட்கள் நிறைவு பெறுகிறது.


இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.வரும் செவ்வாய்க்கிழமையுடன்( இந்த ஊரடங்கு முடிவுக்கு வருவதால் இதை நீட்டிக்கலாமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார். கூட்டத்திற்கு பின் மோடி ஊரடங்கு குறித்த தனது முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:


இந்நிலையில் மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவைபின்வருமாறு..

*மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*தினந்தோறும் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்

*தினமும் யோகாசனம், பிராணயாமம், தியானம் ஆகியவற்றை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி ஊக்குவிக்கும் ஆயுர்வேத  நடவடிக்கைகள்:

*நாள்தோறும் காலையில் சையவன்பிராஷ் லேகியம் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை இல்லாத சையவன்பிராஷ் லேகியத்தை உட்கொள்ள வேண்டும்.

*துளசி, இலவங்கம், கருமிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகியவை கலந்த மூலிகைத் தேநீரை மண்டைவெல்லம் சேர்த்து நாள்தோறும் ஒருமுறையோ ,இருமுறையோ பருக வேண்டும். இதில் எலுமிச்சம்பழச் சாறும் சேர்த்துக்கொள்ளலாம்.

*மஞ்சள் தூள் கலந்த பாலை நாள்தோறும் ஒருமுறையோ இருமுறையோ பருகலாம்.எளிய ஆயுர்வேத நடைமுறைகள்

*காலையும் மாலையும் 2 மூக்குத் துளைகளில் எள் எண்ணெய் / தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றைச் சில துளிகள் விடலாம்.

*எண்ணெய் இழுக்கும் சிகிச்சை : ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்துக்கொண்டு 3 நிமிடங்கள் கழித்துக் கொப்பளிக்க வேண்டும். இதை ஒருநாளைக்கு ஒருமுறையோ இருமுறையோ செய்யலாம்.

வறட்டு இருமல் / தொண்டை புண் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

*வறட்டு இருமல், தொண்டைவலி இருந்தால் புதினா தழைகளை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம்.

*மண்டைவெல்லம், கருப்பட்டி, தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் கிராம்புத் தூள் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை உட்கொண்டால் இருமல், தொண்டைவலி நீங்கும்.

*இந்த நடவடிக்கைகள் பொதுவாக சாதாரண வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண்ணுக்கு சிகிச்சை அளிக்கும். இருப்பினும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவர்களை அணுகுவது நல்லது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here