கிராமத்து ஸ்டைலில் ‘நல்லி எலும்பு குழம்பு’ – வீக்எண்ட் ஸ்பெஷல்!!

0

கிடாவெட்டுனாலே ஒரு குஷிதான். நம்ம ஊருல திருவிழா, விசேஷம், காது குத்துனு எல்லாத்துக்கும் கிடா வெட்டுவாங்க. சொந்தக்காரவங்கலாம் வீட்டுக்கு வந்து நாளைக்கி கிடாவெட்டு இருக்கு வந்துருகனு சொன்னாலே போதும் மொத ஆளா போய்டுவோம். வாழை இலையில சாப்பாடு போட்டு எலும்புக்கறி குழம்பு ஊத்தி சாப்பிட்டா மறக்கவே முடியாது. வாங்க பேசிக்கிட்டே இருக்கமா போய் சமையலை ஸ்டார்ட் பண்ணலாம்.

தேவையான பொருட்கள்:

Spicy-Mutton-Curry-Ingredients
Spicy-Mutton-Curry-Ingredients

எலும்புக்கறி – 1 கிலோ

இஞ்சி – சிறியதுண்டு

பூண்டு – 4

வெங்காயம் – 100 கி

மிளகாய் – 2

தக்காளி – 1

மஞ்சள்தூள் – ஒரு டீ ஸ்பூன்

சீரகம் – ஒரு டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கசகசா – ஒரு டீ ஸ்பூன்

சோம்பு – ஒரு டீ ஸ்பூன்

மல்லித்தழை – தேவையான அளவு

கருவேப்பிலை – தேவையான அளவு

பட்டை, கிராம்பு, இலை – தேவையான அளவு

எண்ணெய் – 50 மி.லி

மசாலா தயார் செய்யும்முறை:

கசகசா, சோம்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைக்க வேண்டும் மற்றும் சிறிது வெங்காயம், மல்லித்தழை, கருவேப்பிலை தாளித்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

முதலில் குக்கரில் எலும்புக்கறி, வெங்காயம், மிளகாய், தக்காளி ,சீரகம், மஞ்சள்தூள், மல்லித்தழை, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, கிராம்பு, வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mutton curry
mutton curry

பின் அரைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து பச்சை வாசனை மாறியவுடன் வேகவைத்த எலும்புக்கறியை அந்த தண்ணியோடு சேர்க்க வேண்டும். பதினைந்து நிமிடம் திறந்தவாறு வேக வைக்கவும். இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கவும். இப்பொழுது சுவையான கிடாவெட்டு எலும்புக்கறி குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here